ADDED : டிச 11, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
நவம்பர் முதல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நேற்று திண்டுக்கல் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.