/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகாரியின் தன்னிலை விளக்கம் : கவுன்சிலர்கள் அதிருப்தி
/
அதிகாரியின் தன்னிலை விளக்கம் : கவுன்சிலர்கள் அதிருப்தி
அதிகாரியின் தன்னிலை விளக்கம் : கவுன்சிலர்கள் அதிருப்தி
அதிகாரியின் தன்னிலை விளக்கம் : கவுன்சிலர்கள் அதிருப்தி
ADDED : ஆக 14, 2011 10:20 PM
சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சியில், சில கவுன்சிலர்களுக்கு மட்டும், அதிகாரி தன்னிலை விளக்கம் அளித்தார்.
பேரூராட்சி கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள் புறக்கணிப்பதால், கவுன்சிலர்களுக்கு உரிய விளக்கம் கிடைப்பதில்லை. இதனால் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சர்வ கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் அடுத்த கூட்டத்தை கூட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அலுவலகத்திற்கு வந்த பொறியாளர், சில கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார். அவர்களிடம்,''எட்டு பேரூராட்சிகளை நிர்வகிக்க வேண்டிய பொறு ப்பு உள்ளது. இதனால் பணிகள் நடக்கும் போது நேரில் கண்காணிப்பது சாத்தியம் இல்லை. கூட்டத்திலும் பங்கேற்க முடியவில்லை. புகார் தெரிவித்தால் ஏற்கனவே நடந்த பணிகளில் குறைகள் இருப்பின், நிவர்த்தி செய்யப்படும்,'' என்றார். இதன்பிறகு, அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொறியாளரால் புறக்கணிக்கப்பட்ட கவுன்சிலர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தினர்.