/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மர்ம கொலைகளால் திணறும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்
/
மர்ம கொலைகளால் திணறும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்
மர்ம கொலைகளால் திணறும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்
மர்ம கொலைகளால் திணறும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்
ADDED : ஜூலை 24, 2011 09:02 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கும் கொலைகளில் துப்பு துலங்காததால், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே வடமதுரை கோட்டக்கல் பாலத்திற்கு கீழ் 2010 ஏப்.,14 ல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மூடையில் ஆண் பிணம் கிடந்தது. சீலப்பாடி முட்புதரில் ஜூலை 20 ல் 30 வயது வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொடைக்கானல் வனப்பகுதியில் ஆக., 30 ல், எலும்பு நொறுக்கப்பட்டு 30 வயது மதிக்க தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலை நடந்து ஓராண்டாகியும் வழக்குகளில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சின்னாளபட்டி அருகே இந்த ஆண்டு ஜன., 21 ல் பாலத்திற்கு கீழே பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மார்ச் 25 ல் தாடிக்கொம்பு பாறைக்குளத்தில், பாதி எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இரு தினங்களுக்கு முன்பு செம்பட்டி போடிகாமன்வாடி அருகே குளத்தில் 30 வயது மதிக்க வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதில், கொலையானவர் குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, செட்டிநாயக்கன்பட்டியில் பகலில் வீட்டில் இருந்த பெண்ணை கொலை செய்தவர்கள் குறித்து ஒரு மாதமாகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. மாவட்டத்தில் நடைபெறும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவது தொடர்கதையாக உள்ளது.