/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா ரத்து கும்பாபிஷேக பணிகளுக்காக

ADDED : டிச 30, 2024 06:00 AM
திண்டுக்கல்: கும்பாபிஷேக பணிகள் நடக்கயிருப்பதால் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் இந்தாண்டுக்கான மாசத்திருவிழா ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் தெரிவித்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் 2003ல் கும்பாபிஷேகம் நடந்தது.
பணிகள் தொடங்கப்பட இருப்பதால் மூலவரான மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு பாலஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி 2025 ஜன., 26ல் நடக்கிறது. அன்று அத்தி மரத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலை கோயில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு அம்மனின் சக்திகளை அந்த சிலைக்கு உருவேற்றம் செய்வதற்கான பூஜைகள் நடக்கும். மூலவருக்கு 3 கால பூஜைகள் நடக்காது. உச்சிகால பூஜையின் போது நைவேத்தியம் மட்டும் நடக்கும். அத்திமர அம்மனுக்கு 3 கால பூஜைகள் நடக்கும். பக்தர்கள் தினமும் அத்திமர அம்மனை தரிசிக்கலாம்.
கும்பாபிஷேக பணிகள் துவங்க இருப்பதால் 2025 ஜன., 24 மாலை 5:00 மணி வரை மூலவர் அம்மனை தரிசிக்க முடியும். கும்பாபிஷேகம் முடிந்த பின்பு தான் தரிசிக்க முடியும். இதனால் மாசி திருவிழாவும் நடக்காது என கூறியுள்ளது.