/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொள்ளையர் அட்டகாசம் தந்தை, மகளுக்கு கத்திக்குத்து
/
கொள்ளையர் அட்டகாசம் தந்தை, மகளுக்கு கத்திக்குத்து
ADDED : ஆக 19, 2011 10:26 PM
நிலக்கோட்டை:நிலக்கோட்டையில் நேற்று முன் தினம் இரவில் முகமூடி
கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து தந்தை, மகளை கத்தியால் குத்தி தப்பினர்.
நிலக்கோட்டை ஜெனகன் தெருவில் வசிப்பவர் பார்த்தமணி, 40. நகை, பித்தளை
பாத்திரம் செய்யும் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு 10.30
க்கு அவரது வீட்டிற்கு ஆம்னி வேன் வந்தது. இறங்கிய ஐந்து பேர் வீட்டை
தட்டினர். பார்த்தமணி கதவை திறந்ததும் வீட்டினுள் புகுந்து, கத்தியால்
காயப்படுத்தினர். அவர் மயங்கி விழுந்தார். பீரோவை திறக்க முயன்ற போது
தடுத்த பார்த்தமணியின் மகள் இன்பச்செல்வியையும் கத்தியால் தாக்கினர்.
சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பவர்கள் வந்தனர். இதை கண்டதும்
கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.நேற்று காலை கைரேகை நிபுணர், மோப்ப நாய்
வரவழைக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.