/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறை சென்று வந்தவருக்கு தியாகி போல் வரவேற்பு; திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
/
சிறை சென்று வந்தவருக்கு தியாகி போல் வரவேற்பு; திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
சிறை சென்று வந்தவருக்கு தியாகி போல் வரவேற்பு; திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
சிறை சென்று வந்தவருக்கு தியாகி போல் வரவேற்பு; திண்டுக்கல் சீனிவாசன் சாடல்
ADDED : செப் 28, 2024 04:28 AM

வடமதுரை: ''லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்று ஜாமினில் வந்த செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பது வெட்கக்கேடானது'' என அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
அய்யலுார் நகர அ.தி.மு.க., சார்பில் காக்காயன்பட்டியில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழா அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மந்திரி சபை மாற்றம் செய்து துணை முதல்வராக உதயநிதியை அறிவிக்கப் போகிறார்களாம். ஏன் தி.மு.க.,வுக்காக உழைத்த துரைமுருகன், நேரு, வேலு, பொன்முடி உள்ளிட்ட தலைவர்கள் இருக்கையில் ஸ்டாலினின் மகன் என்ற ஒரே ஒரு தகுதியை வைத்து துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு தரலாமா.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏதோ சுதந்திர போராட்டத்திற்காக போராடி தியாகம் செய்து சிறைக்கு சென்று ஜாமினில் வந்தவரைப்போல் முதல்வர் வரவேற்கிறார். இது வெட்கக்கேடானது. கேவலமான செயல் என்றார்.
நகர செயலாளர் ராகுல் பாபா தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி டி.சி.ராஜமோகன், மதுரபாரதி, ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம், மலர்வண்ணன், பழனியம்மாள், ஜான் போஸ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் செல்ல பாண்டியன், அவை தலைவர் பழனியப்பன், இணை செயலாளர் சந்திராசெல்லமுத்து, வார்டு செயலாளர் செல்லம்மாள், எம்.ஜி.ஆர்.,மன்ற நிர்வாகி முரளி, ஐ.டி.,பிரிவு கவுதம், மாவட்ட செயலாளர் கார்த்தி பங்கேற்றனர்.