/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வூஷூ போட்டியில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
/
வூஷூ போட்டியில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
ADDED : ஏப் 30, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; வேலுார் கேந்திரா பள்ளியில் ஏப்.
25 முதல் ஏப். 27 வரை மாநில சப் ஜூனியர் வூஷூ போட்டிகள் நடந்தது. தவுளு, ஷான்ஷூ என பிரிவுகளில் நடந்த இதில் திண்டுக்கல் மாவட்ட வூஷூ சங்கம் சார்பில் 30 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் 18 தங்கம், 22 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கங்களை வென்றனர். தவுளு பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை வென்றனர்.இப்போட்டியில் வென்றவர்கள் 25 வது வூஷூ தேசிய சப் ஜூனியர் போட்டியிலும் பங்கேற்றனர். பயிற்சியாளர் ஜாக்கி ஷங்கர், சங்க பொருளாளர் கவிதா, பெற்றோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

