/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.எஸ்.ராஜன் கோப்பை திண்டுக்கல் அணி வெற்றி
/
எஸ்.எஸ்.ராஜன் கோப்பை திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : டிச 30, 2024 06:11 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடந்த எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான முதல் சுற்று போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையேயான எஸ்.எஸ்.ராஜன் கோப்பை சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிச. 27ல் தொடங்கியது.
ரிச்மேன் மைதானத்தில் நடந்த முதல் சுற்றுக்கான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தது.
ரோகித் 37 ரன் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் அணி 12.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிருஷ்ணகிரி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
சஞ்சய்அரவிந்த 41, தீபன்லிங்கேஷ் 47 ரன்கள், சுரேந்தர் 4 விக்கெட்டும் எடுத்தார். தொடர்ந்து, சேசிங் செய்த திருப்பத்துார் அணி 16.1 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தினேஷ்குமார் 40 ரன், சக்திவேல் 5 விக்கெட் எடுத்தார். பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த முதல் சுற்றுக்கான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கடலுார் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது.
தன்ராஜ் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த நாமக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. கவிஷ் 58, எழில்ராஜ் 33 ரன், வினோத்குமார் 3 விக்கெட் எடுத்தார். மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்காசி 20 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்தது.
பாலாஜி 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த சிவகங்ககை அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது த்ரிஸ் 46 (நாட்அவுட்) ரன் எடுத்தார்.