/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்
/
ரோடு வசதியில்லாத தெற்குமேடு கிராமம்
ADDED : செப் 19, 2011 10:36 PM
கொடைக்கானல் : மலைப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களுக்கு, ரோடு வசதி இல்லாததால், அத்தியாவசிய தேவை மற்றும் சிகிச்சை பெற பல கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டியதுள்ளது.
வில்பட்டி ஊராட்சிகுட்பட்ட தெற்குமேடு பகுதி. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ரோடு இல்லாதததை காரணம் காட்டி,குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் உட்பட எந்த வசதியும்இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. விளைந்த காய்கறிகளையும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் பல கி.மீ., கொண்டு செல்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைக்களுக்கும் இதே நிலைதான். பிரசவ காலங்களில் உரிய சிகிச்சை எடுக்க போக்குவரத்து வசதியில்லாததால், சமவெளிப்பகுதியிலுள்ள தங்களுடையஉறவினர் வீட்டில் விடும் நிலையே உள்ளது.பொதுமக்கள் சார்பில் மக்கள்பிரதிநிதி, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் அடிப்பவை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.