ADDED : செப் 11, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
செந்துறை, செப்.12-
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ரத்தினக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பொருளாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் செந்துறை ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள நல்லபிச்சன்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும், புதிய பஸ் ஸ்டாண்டை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
