UPDATED : அக் 24, 2026 12:33 AM
ADDED : அக் 24, 2026 12:28 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுடன் பயணிக்கும் பாதுகாவலர்களையும் இணைக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கருப்பசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ராமுத்தாய் உள்ளிட்ட நுாற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
