/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று
/
ரோட்டில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று
ADDED : டிச 04, 2024 08:27 AM

சேதமான மின் கம்பம் : தோட்டனுாத்து ஊராட்சி ஆர். எம்.டி .சி. காலனி எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் மின் கம்பம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்கால என்பதால் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
--ரவிச்சந்திரன்,தோட்டனுாத்து.
தெருநாய்களால் விபத்து : ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை முன்பு சுற்றி திரியும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மருத்துவமனை வரும் நோயாளிகளையும் துரத்துகிறது. இதைகட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருப்பதி, ஒட்டன்சத்திரம்.
ரோட்டில் ஓடும் கழிவு நீர் : திண்டுக்கல் அய்யனார் பெட்ரோல் பங்க் அருகே பாதாள சாக்கடையின் மூடி வழியாக கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம் குழந்தை, திண்டுக்கல்.
இடியும் நிலையில் தொட்டி : புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்தது காணப்படுகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கி.ரங்கசாமி கம்பளிநாயக்கன்பட்டி.
--
நோய் பரவும் அபாயம் : சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சி ஏழுமலையான் நகர் பகுதி குடியிருப்பு பகுதி சாலையில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
-வள்ளி, வேம்பார்பட்டி.
கழிவுநீர் தேக்கம் : திண்டுக்கல்- பழநி ரோட்டில் இருந்து மதுரை ரோடு நான்கு வழிச்சாலை செல்லும் சர்வீஸ் ரோட்டில் சாக்கடை பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது .பிளாஸ்டிக் பாட்டில்கள் அடைத்துள்ளதால் இதை சரி செய்ய வேண்டும்.
-குமரவேல், திண்டுக்கல்.
பாதையில் குவியும் குப்பை : பழநி இடும்பன் கோயில் அருகே வள்ளியப்பா கார்டன் நுழைவு பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளது . இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
-கார்த்திக், பழநி.