sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தர்பூசணி கலப்படம் வதந்திகளை நம்பாதீங்க; மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத்துறையினர் அறிவுறுத்தல்

/

தர்பூசணி கலப்படம் வதந்திகளை நம்பாதீங்க; மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத்துறையினர் அறிவுறுத்தல்

தர்பூசணி கலப்படம் வதந்திகளை நம்பாதீங்க; மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத்துறையினர் அறிவுறுத்தல்

தர்பூசணி கலப்படம் வதந்திகளை நம்பாதீங்க; மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத்துறையினர் அறிவுறுத்தல்


ADDED : ஏப் 26, 2025 03:44 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தர்பூசணி பழத்தில் கலப்படம் நடப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளிமாவட்டங்கள், மாநிலங்கள் என விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தர்பூசணியில் கலப்படம் நடப்பதாக பரவிய வதந்திகளில் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கலப்படம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் கூறியதாவது : பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது.இதை தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் ,தோட்டக்கலை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாவட்ட அளவிலான தோட்டக்கலை துறை அதிகாரிகள் உத்தரவில் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் தர்பூசணி பழங்களின் நிறம்,சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக கூட்டங்கள், விவசாயிகள், பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களில் தர்பூசணி ஜூஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்திரி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 800 ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

தர்பூசணி மகசூல் சராசரியாக ஒரு எக்கருக்கு 8 முதல் 30 மெட்ரிக் டன் வீதம் 6400 மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது.

இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி1, பி6 போன்ற நுண்னுாட்ட சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. ஆண்டி ஆக்ஸிட் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக பரப்பிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.






      Dinamalar
      Follow us