/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிளாசிக் போலாவில் தீபாவளி விற்பனை ஜோர்
/
கிளாசிக் போலாவில் தீபாவளி விற்பனை ஜோர்
ADDED : செப் 30, 2025 04:30 AM

திண்டுக்கல்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கிளாசிக் போலோ தீபாவளி தள்ளுபடி விற்பனை கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் போலோ நிறுவனத்தின் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி செப்.20ம் தேதி முதல் தாராபுரம், திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி உட்பட பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆடை விற்பனை கண்காட்சியில் சுற்றுப்புற மக்கள், திண்டுக்கல், கரூர், ஒட்டன்சத்திரம், பழநி மக்கள் ஆர்வத்துடன் வந்து தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.
நிறுவன அதிகாரி கூறியதாவது: தாராபுரத்தில், திண்டுக்கல், பழநி ரோடு பிரிவு பகுதியில் எங்களது நிறுவன கடை உள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு பல்வேறு புதிய ஆடைகள், பேண்ட் டி-ஷர்ட்கள் விற்பனை செயல்பட்டு வருகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீபாவளி வரும் பின்னே கிளாசிக் போலோ விற்பனை வரும் முன்னே என கூறும் அளவுக்கு விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது, என்றார்.