/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீபாவளி சீட்டு வசூலித்து மோசடி செய்தவர்கள் கைது
/
தீபாவளி சீட்டு வசூலித்து மோசடி செய்தவர்கள் கைது
ADDED : அக் 19, 2024 05:01 AM
நிலக்கோட்டை, : அடகு கடை, தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அக்ரகாரபட்டியை சேர்ந்தவர்கள் மணிகண்டபிரபு 34, பிரேம்குமார் 36. நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட அருகே நகை அடகு கடை நடத்தி வந்த இவர்கள் சிட்பண்ட், தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர். கந்தப்பகோட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி மனைவி ராக்கு 47, உட்பட பலர் 2021 - 2022ல் தீபாவளி சீட்டில் சேர்ந்தனர். சீட்டு தொகையை வழங்காமல் இருவரும் தலைமறைவாகினர்.
நேற்று மதியம் நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகே மணிகண்ட பிரபு, பிரேம் குமார் இருப்பதை பார்த்த ராக்கு உட்பட பாதிக்கப்பட்ட சிலர் பணத்தை கேட்டுள்ளனர். இருவரும் பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நிலக்கோட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: 70க்கு மேற்பட்டோர் தீபாவளி சீட்டு கட்டி ஏமாந்துள்ளனர். ஏழு பேரிடம் கடன் பத்திரம் வழங்கி ரூ.20 லட்சம், பத்திற்கும் மேற்பட்டோரிடம் தங்க நகைகளை அடகு வாங்கியும் பணத்தை மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நிலக்கோட்டை போலீசில் புகாராளிக்கலாம் என்றனர்.

