/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் வாடிப்பட்டியில் சரண்
/
தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் வாடிப்பட்டியில் சரண்
தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் வாடிப்பட்டியில் சரண்
தி.மு.க., நிர்வாகி கொலையில் இருவர் வாடிப்பட்டியில் சரண்
ADDED : செப் 28, 2024 02:39 AM

திண்டுக்கல்:வேடசந்துார் அருகே திண்டுக்கல் தெற்கு தி.மு.க., ஒன்றிய பொருளாளர் மாசியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் இருவர் வாடிப்பட்டியில் சரணடைந்தனர்.
வேடசந்துார் நாகம்பட்டியை சேர்ந்த மாசியின் மனைவி முத்துமாரி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று முன் தினம் இரவு சமத்துவபுரம் அருகே டூவீலரில் சென்ற மாசியை வழி மறித்த கும்பல் வெட்டி கொலை செய்தது. மாசி உடல் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று காலை மாசி உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். எஸ்.பி., பிரதீப், வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என கூறியதையடுத்து உறவினர்கள் புறப்பட்டனர்.
ஆனால் மதியம் 1:15 மணி வரை குற்றவாளிகள் கைதான விபரம் வெளியாகாத நிலையில் மாசி உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் திருச்சி ரோடு காமராஜர் சிலை பூ மார்க்கெட் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, கரூர், ஈரோடு வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இருவர் சரண்
இந்நிலையில் இவ் வழக்கில் தொடர்புடைய இருவர் மதுரை வாடிப்பட்டி போலீசில் சரண் அடைந்தனர்.
போலீசார் கூறியது: வேடசந்துார் - திண்டுக்கல் ரோட்டில் மதுக்கடையில் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த வீரமணி தரப்பினருக்கும், பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த மதுமோகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் வீரமணி தரப்பினர் மாசியிடம் முறையிட்டுள்ளனர். அவர் மூலம் வேடசந்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் மதுமோகன் 23, சக்திவேல், பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமினில் விட்டனர். இந்த ஆத்திரத்தில் மாசியை மதுமோகன், குருக்களையன்பட்டி சரவணன் 23 வெட்டி கொலை செய்துள்ளனர். இருவரும் நேற்று மதுரை வாடிப்பட்டி போலீசில் சரணடைந்தனர். அவர்கள் வேடசந்துார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.