/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேம்பாலத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., விளம்பரம்; அழிக்கும் நெடுஞ்சாலைத்துறை
/
மேம்பாலத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., விளம்பரம்; அழிக்கும் நெடுஞ்சாலைத்துறை
மேம்பாலத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., விளம்பரம்; அழிக்கும் நெடுஞ்சாலைத்துறை
மேம்பாலத்தில் மீண்டும் மீண்டும் தி.மு.க., விளம்பரம்; அழிக்கும் நெடுஞ்சாலைத்துறை
ADDED : டிச 29, 2024 04:57 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் விருதலைப்பட்டி மேம்பாலத்தில் தி.மு.க., ஆதரவு விளம்பரங்களை நெடுஞ்சாலைதுறையினர் மீண்டும் மீண்டும் அழிப்பது தொடர்கிறது.
திண்டுக்கல் கரூர் நான்கு வழிச்சாலையில் உள்ள விருதலைப்பட்டி மேம்பாலத்தின் இரு புறங்களிலும் தி.மு.க.,வினர் தங்களது கட்சி விளம்பரங்களை எழுதி உள்ளனர். இதை நெடுஞ்சாலைதுறையினர் அழித்து வந்தாலும் விளம்பரங்களை எழுதுவது தொடர்வதால் மீண்டும் மீண்டும் அழிக்கின்றனர்.
வேடசந்துார் கரூர் நான்குவழிச்சாலை பொறியாளர் முருகேசன் கூறியதாவது: விருதலைபட்டி மேம்பாலம் இரு புறங்களிலும் தி.மு.க., வினர் கட்சி விளம்பரங்களை வரைந்துள்ளனர். இதை எழுதும் போதே எங்களது ரோந்து வாகன ஊழியர்கள் தடுத்துள்ளனர். ஆனாலும் கேட்காமல் வரைந்தனர். இதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவுப்படி அழித்துள்ளோம். இதே போல் தாடிக்கொம்பு மேம்பாலத்திலும் வரைந்துள்ளனர். அதையும் அழிக்க உள்ளோம். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சமூக ஆர்வலர் ஆர்.எம்.நடராஜன் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அனைத்து ரோடு பகுதிகளிலும் விளம்பரங்களோ, பதாகைகளோ, டாஸ்மாக் கடைகளோ வைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.
காரணம் வாகன ஓட்டிகளின் எண்ணம் திசை மாறி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் விளம்பரம் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நெடுஞ்சாலைத்துறையினர் காலம் தாழ்த்தாமல் இது போன்ற விளம்பரங்களில் யார் ஈடுபட்டாலும் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சம் பார்க்க கூடாது என்றார்.