/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அக்.21ல் துணை முதல்வர் வருகை வரவேற்க தி.மு.க., கூட்டத்தில் முடிவு
/
அக்.21ல் துணை முதல்வர் வருகை வரவேற்க தி.மு.க., கூட்டத்தில் முடிவு
அக்.21ல் துணை முதல்வர் வருகை வரவேற்க தி.மு.க., கூட்டத்தில் முடிவு
அக்.21ல் துணை முதல்வர் வருகை வரவேற்க தி.மு.க., கூட்டத்தில் முடிவு
ADDED : அக் 08, 2024 04:32 AM
ஒட்டன்சத்திரம் : அக்.21ல் திண்டுக்கல் மாவட்டம் வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்க தி.மு.க., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. மாவட்ட அமைத்தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி, துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தும், அக்.21ல் திண்டுக்கல் மாவட்டம் வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, பொருளாளர் விஜயன், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தங்கராஜ், தர்மராஜ் , சுப்பிரமணி, சாமிநாதன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆண்டிஅம்பலம், ஷேக் சிக்கந்தர் பாட்ஷா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலு, செல்வராஜ், நகராட்சித் தலைவர் திருமலைசாமி கலந்து கொண்டனர்.