/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆந்திர முதல்வர் கம்பெனியில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் த.ம.மு.க.,வினர் தலைமறைவு த.ம.மு.க., வினர் 10 பேர் தலைமறைவு

ADDED : ஆக 22, 2025 11:03 PM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு சொந்தமான பால் கம்பெனியில், கட்சி பொதுக்கூட்டம் நடத்த ரூ.5 லட்சம் நன்கொடை கேட்டு மிரட்டிய த.ம.மு.க., வினர் 10 பேரை போலீசார் தேடுகின்றனர்.
சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு சொந்தமான பால் பாக்கெட் கம்பெனி வடமதுரையில் 2003 முதல் செயல்படுகிறது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரான மேட்டுப்பட்டி முத்துரத்தினவேல், நிலக்கோட்டை சங்கால்பட்டி வழக்கறிஞர் முனிச்செல்வம் 40, உள்ளிட்ட 10 பேர் இந்த கம்பெனிக்கு சென்று கட்சி பொதுக்கூட்டம் நடத்த ரூ.5 லட்சம் நன்கொடை தர வேண்டும் என கேட்டு மிரட்டினர்.
ஊழியர்கள் கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தர உயரதிகாரிகள் அறிவுரைப்படி மேலாளர் ரஞ்சித்யாதவ் வடமதுரை போலீசில் புகார் தந்தார். இதையடுத்து முத்துரத்தினவேல், முனிச்செல்வம் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.