/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வினர் சதி செய்வார்கள்: நத்தம் விஸ்வநாதன்
/
தி.மு.க.,வினர் சதி செய்வார்கள்: நத்தம் விஸ்வநாதன்
ADDED : ஆக 22, 2025 02:48 AM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பழனிசாமி செப்.,ல் பிரசாரம் செய்யஉள்ள நிலையில் இதை சீர்குலைக்க தி.மு.க.,வினர் சதிசெய்வார்கள் . அதற்கு இடமளிக்காத வகையில் அ.தி.மு.க.,வினர் பொறுமை காத்து வெற்றிக்கூட்டமாக மாற்றவேண்டும் ''என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் செப்.,ல்பிரசாரம் செய்ய உள்ளதால் தொடர்ந்து இதன் முன்னேற்பாடு தொடர்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நத்தம் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி செப். 8 முதல் 12 வரை மதுரை, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு 12 ம் தேதி இரவு திண்டுக்கல்லில் தங்குகிறார். செப் 13 காலை 10:00 மணிக்கு தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் வணிகர்கள், விவசாயிகள், தோல் வர்த்தகர்கள் வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறார்.மாலை 4:30 மணிக்கு நத்தம் தொகுதியில் பிரசாரம் துவக்கும் அவர் இரவு 7:00 மணிக்கு திண்டுக்கல் , 8:30க்கு நிலக்கோட்டை தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.
செப். 14 மாலை 4:30 மணிக்கு ஆத்துார், 6:00 மணிக்கு ஒட்டன்சத்திரம், 7:30 மணிக்கு பழநி தொகுதிகளில் பேசுகிறார். அன்று இரவில் பழநியில் தங்கும் அவர் மறுநாள் சேலம் செல்கிறார். கரூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது வேடசந்துார் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கான திட்டமிடல் வகுக்கப்படும்.
பழனி சாமி சுற்றுப்பயணம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அ.தி.மு.க., பிரசாரத்தை சீர்குலைக்க தி.மு.க., வினர் ஏதாவது ஒருவகையில் வேலை செய்வார்கள். அவர்களின் சதித்திட்டம் நிறைவேறும் வகையில் நாம் அவசர படக்கூடாது.
பொறுமை காத்து பழனிசாமி பிரசாரத்தை வெற்றிக்கூட்டமாக மாற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட அவைத்தலைவர் குப்புச்சாமி, இணைச்செயலாளர் தேன்மொழி எம்.எல்.ஏ., மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் வேணுகோபால், இளைஞரணி இணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் சந்ராகோபாலகிருஷ்ணன், விஜயபாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், யாகப்பன், முருகன், சார்பு அணி செயலாளர்கள் அன்வர்தீன், கோபி, உதயக்குமார், நிலக்கோட்டை சேகர் கலந்துகொண்டனர்.