தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 31, 2026 11:38 PM

ADDED : அக் 31, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 11:38 PM ADDED : அக் 31, 2026 05:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் தி.மு.க., கிழக்கு, மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் மணிக்கூண்டு அருகே ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் இந்திரா, மலர்விழி தலைமை வகித்தனர். துணைச்செயலாளர் மார்கிரேட் மேரி, மேயர் இளமதி முன்னிலை வகித்தனர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.,செந்தில்குமார் பேசினர்.

இதில் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ, காந்திராஜன், மாநகர செயலாளர் ராஜப்பா, மகளிரணி நிர்வாகிகள் கவிதா, முத்துலட்சுமி மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து மகளிர், தொண்டரணியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us