/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
/
கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ADDED : மே 10, 2025 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: ஜி.தும்மலப்பட்டி முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. வத்தலக்குண்டு கெங்குவார்பட்டி ரோட்டில் நடந்த பந்தயத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடந்தது. முதலிடம் பிடித்த காளைகளுக்கும், வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.