நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: ஆத்தூர் போடிகாமன்வாடி மேல் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள் 52.
தாடிக்கொம்பு செங்குளம் பத்மாநகர் அருகே லாரியை நிறுத்தி விட்டு, ரோட்டைக் கடந்து ஒட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் லாரியை நோக்கி வந்தார்.
அப்போது வேடசந்தூர் திண்டுக்கல் ரோட்டில் சென்னமநாயக்கன்பட்டி, மகாராஜா நகர் பார்த்தசாரதி வேகமாக ஓட்டி வந்த டூவீலர், பெருமாள் மீது மோதியது.
அதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

