ADDED : அக் 24, 2026 05:35 PM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வறண்டு கிடக்கும் குளத்தில் கார் பாய்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சந்தோஷ் 43, தனியார் நிறுவன ஊழியர். இவரது கார் டிரைவர் கோவை மாவட்டம் ஆனைமலை கம்பாலைபட்டியைச் சேர்ந்த ஐயப்பன் 40. சந்தோஷ் சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் சென்றார். காரை ஐயப்பன் ஓட்டினார். இன்று (அக்.,24) காலை 6:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டை – பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.
கொல்லப்பட்டி குளத்தின் மேம்பாலம் மீது சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவர் மீது மோதி வறண்டு கிடக்கும் குளத்திற்குள் பாய்ந்தது. இவ்விபத்தில் கார் உருக்குலைந்து டிரைவர் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சந்தோஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
