ADDED : நவ 08, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு, தற்கொலை எண்ணங்களை தவிர்த்தல் சார்ந்த பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி, பழநி கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக நடந்தது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார்.
பழநி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் சாய்லதாராஜ், இணை கன்வீனர் திருவருள்வளவன், பொருளாளர் அப்துல்கரீம், செயற்குழு உறுப்பினர் வைரபாரதி, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் ஹெரால்ட்ஜாக்சன், ஆறுமுகம், பள்ளி ஜே.ஆர்.சி., ஆசிரியை கோமதி கலந்து கொண்டனர்.ஆசிரியர் பாண்டிய ராஜன் நன்றி கூறினார்.

