/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாடக மேடைக்கு பூட்டு; பொதுமக்கள் அதிருப்தி
/
நாடக மேடைக்கு பூட்டு; பொதுமக்கள் அதிருப்தி
ADDED : நவ 08, 2025 01:46 AM

வேடசந்துார்: குஜிலியம்பாறையில் நாடக மேடைக்கு பூட்டு போடபட்டதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஊருக்குள் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. போதிய இடவசதியுடன் உள்ள இக்கோயில் அருகே உள்ள நிழல் தரும் அரச மரத்தை சில ஆண்டு களுக்கு முன் அகற்றினர். மரம் இல்லாததால் அருகில் உள்ள நாடக மேடையில் அப்பகுதி பொது மக்கள், பெரியவர்கள், சிறுவர்கள் சிறிது நேரம் ஆற அமர்ந்து பொழுதை கழித்து சென்றனர்.
ஒராண்டாக நாடக மேடை, சுற்றிலும் ஆங்கில் அடித்து பூட்டு போட்டு விட்டனர். இதனால் அப்பகுதி சிறுவர்கள் சிறிது நேரம் விளையாடக் கூட இடமின்றி தவிக்கின்றனர்.
அரசு நிதியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட ஒரு கட்டடம், பயன்பாடு இன்றி பூட்டிக் கிடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாடக மேடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

