/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருட்டு பாரில் குடிபோதையில் மோதல்; கொலை
/
திருட்டு பாரில் குடிபோதையில் மோதல்; கொலை
ADDED : பிப் 17, 2024 05:48 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே அதிகரிப்பட்டி அரசு டாஸ்மாக் கடை அருகே செயல்படும் அனுமதி இல்லாத திருட்டு பாரில் மது போதையில் ஏற்பட்ட மோதலில் கட்டட தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனருகே கள்ளத்தனமாக அரசு அனுமதியின்றி பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6:15 மணிக்கு பெத்தனம்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முருகன் 55, மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் கோட்டைப்பட்டி மனோஜ்க்கும் 25, மது போதையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மனோஜ் தாக்கியதில் முருகன் இறந்தார். சாணார்பட்டி போலீசார் தலைமறைவான மனோஜை தேடி வருகின்றனர்.