ADDED : நவ 25, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான 17வயதிற்குட்பட்டோர் டேபிள் டென்னிஸ் போட்டியில் சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யோகஸ்ரீ, ரச்சிதாதேவி ஆகியோர் தமிழக அணிகளில் பங்கேற்று முதல் இடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றனர்.
அவர்களுக்கு இன்று தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது வழங்கப்படுகிறது. திண்டுக்கல் ஆர்.எஸ்., ரோட்டில் உள்ள மாவட்ட கால்பந்து சங்க அலுவலகத்தில் நடக்கின்ற நிகழ்வில் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் காஜாமைதீன் தலைமை வகிக்கிறார். திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் செயலாளர் சண்முகம் விருதுகளை வழங்குகிறார். மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் நிறுவனர் ஞானகுரு, செயலாளர் செந்தில்குமார், பயிற்சியாளர் ஜேம்ஸ் பிரகாஷ் பங்கேற்கின்றனர்.