sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தேர்தல் விழிப்புணர்வு கோலம்

/

 தேர்தல் விழிப்புணர்வு கோலம்

 தேர்தல் விழிப்புணர்வு கோலம்

 தேர்தல் விழிப்புணர்வு கோலம்


ADDED : மார் 19, 2026 05:05 AM

Google News

ADDED : மார் 19, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி நடந்தது.பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இதில் தேர்தல் திருவிழா, தேசத்தின் திருவிழா, 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்.

வாக்களிப்பது நமது உரிமை என கோலங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி, ஆர்.ஐ., ராஜசேகரன், வி.ஏ.ஓ., சரண்யா பங்கேற்றனர்.

பழநி: நகராட்சி ,மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பாக பழநி பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டடத்தில் தேர்தலில் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நடைமேடையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து வண்ண கோலமிட்டனர். நகராட்சி கமிஷனர் டிட்டோ, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் மைதிலி கலந்து கொண்டனர்.

வேடசந்துார்: ஒன்றிய அலுவலகத்தில் ரங்கோலி கோலப்போட்டி தொகுதி தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

சுய உதவி குழு பெண்கள் தேர்தல் குறித்த விழிப்புணர்வாக ரங்கோலி கோலமிட்டனர். வருவாய் ஆய்வாளர் பாரதி, மகளிர் திட்ட வட்டார அலுவலர் ஜெயசித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பங்கேற்றனர்.

திண்டுக்கல்: கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரையப்பட்டது. சிறந்த ரங்கோலிக்கு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us