UPDATED : நவ 18, 2026 09:28 PM
ADDED : நவ 18, 2026 09:28 PM
அ நிறம் | அளவு
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பழநி கோம்பைபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை உலா வருகிறது.
இங்கு மா, கொய்யா, தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இரவு நேரத்தில் ஒற்றை யானை இந்த விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
