/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வைப்பு நிதியை செலுத்தாவிடில் அபராதத்துடன் வட்டி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அறிவுறுத்தல்

ADDED : ஜூன் 05, 2025 01:40 AM
திண்டுக்கல்: ''தொழிலாளர் வைப்பு நிதிக்கான மாதாந்திர பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்தவில்லையெனில் அபாரதம், வட்டியுடன் கட்ட நேரிடும் ''என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திண்டுக்கல் அலுவலகம் செய்தி குறிப்பு: திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகளை செலுத்தவில்லை. இதைடுத்து அந்த நிறுவனத்துக்கு எதிராக மண்டல வைப்பு நிதி ஆணையரால் 2024 ஏப்ரலில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது.
விசாரித்த நீதிமன்றம் முன் பணம் செலுத்தி மத்திய அரசின் தொழில்துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என டிசம்பரில் உத்தரவிட்டது. ஆனால் அந்த நிறுவனம் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. இதை தொடர்ந்து நிறுவனத்தில் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் அமலாக்க அலுவலர்கள் கண்ணதாசன், ராஜ்கண்ணு நிறுவன பஸ்சை ஜப்தி செய்தனர்.இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க அனைத்து நிறுவனங்களும், ஊழியர்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதிக்கான மாதாந்திர பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் அபாரதம், வட்டியுடன் கட்ட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.