தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சமத்துவ கொடை விழா

சமத்துவ கொடை விழா

சமத்துவ கொடை விழா


UPDATED : அக் 06, 2026 11:28 PM

ADDED : அக் 06, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:28 PM ADDED : அக் 06, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஜி.கல்லுப்பட்டியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜேம்ஸ்கிம்டன் தொண்டு நிறுவனத்தை நிறுவி திண்டுக்கல், தேனி மாவட்ட அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு பங்காற்றினார். கல்வி நிறுவனங்கள், குழந்தைகள், ஆதரவற்றோர் காப்பகங்கள் என அவர் உருவாக்கிய நிறுவனங்களால் ஆயிரக்கணக்கானோர் இன்று வரை பயன்பெறுகின்றனர்.

தங்களின் நலனுக்காக வாழ்ந்த ஜேம்ஸ்கிம்டனின் நினைவு நாளை அந்த கிராமத்து மக்கள் சமத்துவ கொடை விழாவாக நடத்தி வருகின்றனர். ஒன்பதாம் ஆண்டாக நடந்த விழாவில் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி ஜேம்ஸ்கிம்டனின் உருவச்சிலையை கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அனைவராலும் தாத்தா என்று அழைக்கப்பட்ட பாதிரியாருக்கு நன்றி கூறும் விதமாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us