UPDATED : ஜூலை 18, 2026 07:26 PM
ADDED : ஜூலை 18, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்தாகிர் தலைமை வகித்தார். செயலாளர் முகமது ஆசிக் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் சதாம் உசேன் பேசினார்.
தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய முகாம் நடத்த வேண்டும், பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்கள் முன் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பயாஸ் அஹ்மத், சேக், முகமது அலி, தமீம் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
