UPDATED : ஜூலை 18, 2026 07:26 PM
ADDED : ஜூலை 18, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
பழநி:தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க வட்டார மாநாடு பழநி சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.
