UPDATED : அக் 27, 2026 06:29 PM
ADDED : அக் 27, 2026 06:25 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். பகுதி தலைவர் சம்சுதீன் வரவேற்றார்.
வெற்றிப்பயண திட்டத்தால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து ஆட்டோ தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு உறுப்பினர்கள் சர்தார் சேட், முகமது அலி, ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
