/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.10.76 லட்சம் மதிப்பிலான அலைபேசி போலி உதிரி பாகங்கள் பறிமுதல்: கைது 4
/
ரூ.10.76 லட்சம் மதிப்பிலான அலைபேசி போலி உதிரி பாகங்கள் பறிமுதல்: கைது 4
ரூ.10.76 லட்சம் மதிப்பிலான அலைபேசி போலி உதிரி பாகங்கள் பறிமுதல்: கைது 4
ரூ.10.76 லட்சம் மதிப்பிலான அலைபேசி போலி உதிரி பாகங்கள் பறிமுதல்: கைது 4
ADDED : ஜூன் 22, 2025 09:19 PM

திண்டுக்கல்:பிரபல அலைபேசி கம்பெனி தயாரிப்புகள் பெயரில் போலியான உதிரிபாகங்கள், புளூடூத் ஹெட்செட், சார்ஜர்கள் விற்ற 4 பேரை திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து, ரூ.10.76 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சந்தையில் போலி தயாரிப்புகள் விற்பனையை தடுக்க போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் பஜார் பகுதிகளில் உள்ள சில அலைபேசி கடைகளில் ஒரிஜினல் அலைபேசி உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவன விசாரணை அதிகாரி குமாரவேல் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஜப்லா தலைமையிலான போலீசார் கரூரில் அலைபேசி கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 4 கடைகளில் ஆப்பிள் அலைபேசி தயாரிப்புகள் பேரில் போலியான புளூடூத் ெஹட்செட்கள், அலைபேசி கேஸ் கவர்கள், டேட்டா கேபிள்கள், சார்ஜர் ஹெட் போன்றவை விற்றது கண்டுப்பிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சத்து 76 ஆயிரத்து 700 மதிப்புள்ள போலி தயாரிப்புகளை பறிமுதல் செய்த போலீசார் அதுதொடர்பாக கரூர் திரு.வி.க.,ரோட்டை சேர்ந்த கோபால்புரி 42, சின்னாந்தன் கோவில் மெயின்ரோட்டை சேர்ந்த விக்ரம் சிங் 31, ராஜஸ்தான் மாநிலம் ஜலோரை சேர்ந்த கன்பத் 25, கோபரம் 30 ஆகிய 4 பேரை கைது செய்தனர். எங்கு வாங்கினர் என அவர்களிடம் மேல்விசாரணை நடக்கிறது