/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைதீர் கூட்டத்தில் இல்லை இருக்கைகள் கதவும் அடைக்கப்பட்டதால் விவசாயிகள் விரக்தி

ADDED : அக் 30, 2024 04:51 AM
பழநி : பழநி சப் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்இருக்கைகள் உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லாத நிலையில் கதவுகளும் அடைக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்திக்குள்ளாகினர்.
பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
சப் கலெக்டர் கிஷன் குமார் தலைமையில் தாசில்தார் பிரசன்னா , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் தரப்பில் பழநி குளத்தில் மண் அள்ளுவதை முறைப்படுத்தவும், வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகள் சரி செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். கடந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான தீர்வு குறித்து விவசாயிகள் விவாதித்தனர். கூட்ட அரசியல் போதுமான இருக்கைகள் இல்லாததால் விவசாயிகள் அரங்கிற்கு வெளியே நின்றப்படி இருந்தனர்.
கூட்ட அரங்கின் கதவுகளையும் அதிகாரிகள் அடைக்க விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன.