/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 26, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம் : தனியார் காற்றாலை நிறுவனத்திற்காக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பியம்பட்டியில் விவசாயிகள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். அப்பியம்பட்டியில் தனியார் காற்றாலைகள் உள்ளன.
இவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல நீர்நிலைகள்,அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கம்பங்களால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லவும் இடையூறாக இருக்கும். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரவுள்ள லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

