ADDED : டிச 31, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: விவசாயத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாமல் தடை இன்மை சான்று பெற்ற செங்கல் சூளைகளை அமைக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்
ஐவர்மலை புதுார் கிளை தலைவர் குமரேசன் தலைமையில் வாக்காளர் அட்டை குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கிளை செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சரவணன் மூர்த்தி கலந்து கொண்டனர்.

