தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உழவர் பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா

உழவர் பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா

உழவர் பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா


ADDED : அக் 13, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கத்தினர் திரண்டனர். இதில் ஆண்டிபட்டி, பெரியம்மாபட்டி, சித்தரேவு, ரவிமங்கலம் பகுதிகளில் அரசு உபரி நிலங்களில் விவசாயிகளுக்கு பட்டா வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்து வருவதால், அவற்றை சரி செய்து பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இப்போராட்டத்தை தவிர்க்க ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதிகாரிகள் வர தாமதமானதால் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் காளிதாஸ், உழவர் உரிமை இயக்க மாநில தலைவர் அருள்ஆறுமுகம், வி.சி.க., விவசாயிகள் அணி மாநில இணைச்செயலாளர் வேலுசிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட சிறுபான்மைத்துறை நல அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us