UPDATED : அக் 16, 2026 08:09 PM
ADDED : அக் 16, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
பழநி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். 200 நாட்கள் வேலை, தினமும் ரூ.700 கூலி வழங்க வேண்டும், கண் கருவிழி மூலம் வருகை பதிவு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் பாலாஜி, செயலாளர் அருள் செல்வன், மாவட்ட குழு உறுப்பினர் சாந்தாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
