/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மறுகால் சென்ற சடையன்குளம் மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மறுகால் சென்ற சடையன்குளம் மகிழ்ச்சியில் விவசாயிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மறுகால் சென்ற சடையன்குளம் மகிழ்ச்சியில் விவசாயிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மறுகால் சென்ற சடையன்குளம் மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : டிச 24, 2024 05:14 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சடையன்குளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மறுகால் சென்றதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு இதன் கீழ் உள்ள சத்திரப்பட்டி முத்து பூபாலசமுத்திரம், விருப்பாச்சி பெருமாள் குளம், சடையன்குளம், ராமசமுத்திரம் கண்மாய் ஆகியவற்றிற்கு சென்றது.
தற்போது இந்த நான்கு குளங்களும் நிரம்பி மறுகால் செல்கின்றன. பெருமாள்குளம் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீர் ஓட்டக்குளம், பாப்பன்குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், சாமியார் புதுார் முத்து சமுத்திரம் கண்மாய் ஆகியவற்றிற்கு நீர்வரத்தை கொண்டு செல்லும்.
இதேபோல் சடையன்குளம் நிரம்பி மறுகால் செல்லும் நீர் செங்குளத்திற்கு செல்கிறது.
இந்த குளங்கள் நிரம்பி உள்ளதால் இவற்றை சுற்றிய 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் குளங்களை சுற்றிய பல ஊராட்சிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யும் என்பதால் அடுத்து வரும் ஓராண்டுக்கு இப்பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை
சடையன்குளம் பாசன விவசாயி செல்வராஜ் கூறியதாவது: சடையன்குளம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பி மறுகால் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அடுத்து வரும் ஓராண்டிற்கு வேளாண் தொழில் சிறப்பாக நடக்கும். இத்துடன் சுற்றிய ஊராட்சிகளில் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும், என்றார்.