/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் மூளை சாவு உடல் உறுப்புகள் தானம்
/
பெண் மூளை சாவு உடல் உறுப்புகள் தானம்
ADDED : அக் 21, 2024 05:29 AM
வேடசந்துார்: வேடசந்துார் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
வேடசந்துார் கல்வார்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி37. இவர் நெடுஞ்சாலையில் சாலை பணியாளராக வேலை பார்த்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த வாரம் அரவக்குறிச்சி மேம்பாலத்தில் இவர் ரோட்டின் நடுவே இருந்த செடிகளை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த வேன் கலைச்செல்வியின் மீது மோதியது.
காயமடைந்த கலைச்செல்வி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். நேற்று இரவு கலைச்செல்வியின் உடல் அவரது சொந்த ஊரான கல்வார்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி நேற்று அதிகாலை 3:10 மணிக்கு அஞ்சலி செலுத்தினார்.
வேடசந்துார் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி உறுப்பினர் பழனிசாமி பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து கலைச்செல்வியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.