ADDED : அக் 08, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கூட்டுறவு நகரில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் கம்ப்யூட்டர், மின் சாதனங்கள், ஏ.சி., உள்ளிட்டவற்றை ஆப் செய்ததுடன் கட்டடத்துக்கான மின் சப்ளையை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.