ADDED : அக் 08, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் வன்கொடுமை தடுப்புச்சட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் அரசு ஊழியர் சங்க ஐக்கியப்பேரவை மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், வன்கொடுமை தடுப்புச்சட்ட இலவச தொலைபேசி எண்ணை அரசு அலுவலகங்களில் ஒட்ட வேண்டும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா, வீடுகள் உரியவரிடத்தில் உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தார்.