/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் ரெடிமெட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் தீ
/
நத்தம் ரெடிமெட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் தீ
ADDED : அக் 25, 2024 02:55 AM

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தையல் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள், ஆடைகள் எரிந்தன.
நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம் 50. வேலம்பட்டி பகுதியில் உள்ள கந்தசாமி நகரில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார்.
40 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு நேற்று அதிகாலை 3:15 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தையல் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள், தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடைகள் எரிந்தன. யாரும் தங்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரிக்கிறார்.