/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து 10 கார்கள் கருகி நாசம்
/
ஒர்க் ஷாப்பில் தீ விபத்து 10 கார்கள் கருகி நாசம்
ADDED : மார் 16, 2025 12:56 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கார் ஒர்க் ஷாப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 10க்கும் மேற்பட்ட கார்கள் கருகின.
திண்டுக்கல், செம்மடைப்பட்டியைச் சேர்ந்தவர் சிவரத்தினம். ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இங்கு, 50க்கும் மேற்பட்ட கார்கள் பழுது நீக்கம் செய்ய நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் அருகில் இருந்த கார்களுக்கும் தீ பரவியது.
இதில், 10க்கும் மேற்பட்ட கார்கள் கருகின. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.