/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் மே 24ல் துவங்குகிறது மலர்கண்காட்சி; ஜூன் 1 வரை நடக்கிறது
/
கொடைக்கானலில் மே 24ல் துவங்குகிறது மலர்கண்காட்சி; ஜூன் 1 வரை நடக்கிறது
கொடைக்கானலில் மே 24ல் துவங்குகிறது மலர்கண்காட்சி; ஜூன் 1 வரை நடக்கிறது
கொடைக்கானலில் மே 24ல் துவங்குகிறது மலர்கண்காட்சி; ஜூன் 1 வரை நடக்கிறது
ADDED : மே 18, 2025 10:52 PM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62வது மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா மே 24 துவங்குகிறது.
இம்மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடக்கிறது. இதற்காக சில மாதங்களுக்கு முன் மலர்படுகைகள் தயார் செய்யப்பட்டு 30 வகையான மலர்கள் மற்றும் ஒன்றரை லட்சம் நாற்று நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக்குலுங்குகின்றன. இந்நிலையில் 62 வது மலர் கண்காட்சி மே 24ல் துவங்கி ஜூன் 1 வரை 9 நாள் நடப்பதாக திண்டுக்கல் கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மலர் கண்காட்சியை ஊரக வளர்ச்சி, வேளாண், உணவு, சுற்றுலாத்துறை அமைச்சர்கள் முறையே துவக்க உள்ளனர். கண்காட்சியில் காய்கறி, பழங்கள், பூக்களால் ஆன 7 வகை உருவங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. கோடை விழா நிகழ்ச்சிகள் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு பிரையன்ட், ரோஜா பூங்காக்களில் நடத்தப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கட்டணம் உயர்வு
பிரையன்ட் பூங்காவில் நடக்கும் மலர்கண்காட்சியை காண வருகை தரும் சுற்றுலா பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. வழக்கமாக பெரியவர்களுக்கு ரூ. 50, சிறுவர்களுக்கு ரூ. 25 என வசூலிக்கப்படும். தற்போது மலர் கண்காட்சி நடக்கும் 9 நாட்களுக்கும் பெரியவர்களுக்கு ரூ.75, சிறுவர்களுக்கு ரூ. 35 வசூலிக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.