ADDED : பிப் 06, 2025 05:53 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் உணவு வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய உணவுத் திருவிழா கண்காட்சி நடந்தது.
இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை சார்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார்.
ஆயுஷ் மருத்துவம் சார்ந்த சிறு தானிய உணவுகள், முளை கட்டிய பயிறு வகைகள், சங்ககால உணவான தேனும் தினை மாவும், தினை பொங்கல், சாமைக் கஞ்சி, குதிரைவாலி பாகுபலி கஞ்சி, கேழ்வரகு கொழுக்கட்டை, சோளம் உப்புமா வரகு முறுக்கு போன்ற சிறு தானிய உணவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
ஆயுஷ் மருத்துவர்கள் அமுதா, ரெங்கநாதன், ஜோதிமீனாட்சி, பாலமுருகன்,ஜெயச்சந்திரன், தேவராஜா, யவனாராணி, ஆயுஷ் மருந்தாளுநர்கள் செந்தில்வேல், கோமதி, ஜூலியட் ஜெனிபர், மருத்துவ பணியாளர்கள் ராஜ்குமார், அருள்தாஸ், குமார்,நாகலட்சுமி, அலுவலக இளநிலை உதவியாளர் நாகராஜ் பங்கேற்றனர்.