sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி

/

கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி

கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி

கால்பந்து லீக்:சீட்ஸ் அணி வெற்றி


ADDED : டிச 03, 2024 07:04 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் 2024--25 கால்பந்து தொடர் லீக் போட்டியில் சீட்ஸ் அணி வெற்றி பெற்றது.

புனித மரியன்னை பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் ஏ.பி.சி., பாலி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் சீட்ஸ் கால்பந்து அணி 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது.

வசந்த், சரத், நிசன் தலா 1 கோல் அடித்தனர். ஏ.பி.சி., அணியில் விஜய் கோல் அடித்தார். ஆர்.என்.எல்., எம்.எப்.சி., அணிக்கு எதிரான போட்டியில் ஞானம் எம்.எப்.சி., கால்பந்து அணி 4:0 என்ற கோல் கணக்கில் வென்றது.

ரீகன், மணிமாறன், சஞ்சய், கிருஷ்ணா கோல் அடித்தனர். பீலே ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எம்.எம்., எப்.சி., கால்பந்து அணி 3:0 என்ற கோல் கணக்கில் வென்றது. யுவராஜ் 2, மோகன் 1 என கோல் அடித்தனர்.

எஸ்.எஸ்.எம்., கால்பந்து அணி, பழநி ஸ்டால்லியன்ஸ் எப்.சி., அணிக்குமிடையேயான போட்டியில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

எஸ்.எஸ்.எம்., அணியில் தியாகு , பழநி அணியில் எடிசன் கோல் அடித்தனர்.

எம்.எஸ்.பி., பள்ளி மைதானத்தின் நடந்த போட்டியில் பட்டுமணி கால்பந்து கிளப் அணிக்கு எதிரான போட்டியில் அன்னை ஸ்போர்ட்ஸ் கால்பந்து அணி 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. கீர்த்திவாசன் கோல் அடித்தார்.

ஆர்ட்ஸ் டிரஸ்ட் திண்டுக்கல் சிட்டி கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் 2:0 என்ற கோல் கணக்கில் சன் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வென்றது.

அமர், சூர்யா கோல் அடித்தனர். கோரோனேசன் கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் என்.கே.ஏ.பி., எப்.சி., அணி வென்றது. வராஜ், கோபி, டேனியல், எபியன், ரூபன் கோல் அடித்தனர்.






      Dinamalar
      Follow us